எங்கள் சபையைக் குறித்து

எங்கள் சபை

எங்கள் சபையின் நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவதுதான். தேவனுடைய ஊழியர்களைக் கொண்டு தேவன் அநேகருடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதால், இந்த ஊழியம் ஒரு தொடர் ஓட்டம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது.


எங்கள் ஆராதனைக்கு நீங்கள் வரும்போது அநேக இன்முகங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். உதவியாளர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்த உதவி செய்வார்கள். வரவேற்பாளர்கள் உங்களை வரவேற்று உங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்து, சரியான இருக்கைகளுக்கு உங்களை அழைத்துச் செல்வார்கள்.

என்ன உடுத்துவது? ஆடை, அணிகலன்களைப் பற்றி ஆண்டவர் கவலைப்படுவதில்லை. இருதய சுத்தம்தான் அவருக்கு முக்கியம். உள்நாட்டு மேலைநாட்டு ஆடைகளை அணிந்த அநேகரைப் பார்ப்பீர்கள். கவர்ச்சிகரமான, தகுதியற்ற ஆடைகளை அணிவதும் தவிர்க்கப்படுவது நலம்.



நமது ஆராதனைகள்

ஜீவனோடு உள்ள தேவனோடு ஒரு மாற்றம் கொண்ட வாழ்க்கை உறவுமுறைகளைக் கொண்டு வர நாங்கள் மக்களை வழி நடத்துகிறோம். எங்களது ஆராதனை கூட்டங்கள் அதனையே பிரதிபலிக்கின்றன. ஆண்டவரின் அதிகாரமுள்ள வார்த்தை எந்த மறுப்பும் இல்லாமல் பிரசங்கிக்கப்படுகிறது. நன்றி உணர்வோடும், வழிபாடுகளால் அவர் உயர்த்தப்படுகிறார்.

நீங்கள் எங்கள் ஆராதனை அரங்கத்தை அடைந்தவுடனே உதவியாளர்கள் உங்களை வரவேற்று உங்கள் இருக்கைகளை காட்டுவார்கள். நீங்கள் நேரத்திற்கு முன்பாக வருகை தரும்படி உற்சாகப்படுத்துகிறோம். ஏனென்றால் சரியான நேரத்திற்கு ஆராதனை துவங்கி சுமார் 2 மணி நேரம் நடைபெறும்.

நமது ஆராதனை பாடலுடன் (அதிக பட்சம் புதிதாக இயற்றிய, பாரம்பரிய பாட்டுகள், பாமாலைகள், புதிய பாட்டுகள்) ஆரம்பிக்கும். பிறகு ஜெபம், பிறகு எல்லோரும் ஆண்டவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அவர் என்ன சொல்ல இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள இதயங்களை தயார் செய்கிறோம்.

வாரக் கடைசி கூட்டங்கள் - அதாவது ஞாயிறு செய்திகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

பிரசங்கங்கள் ஒலி, ஒளி குறுந்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு நமது புத்தக சாலையில் கிடைக்கப் பெறுகின்றன.

ஓவ்வொரு ஆராதனை வேளைக்கு பின் முதன் முதலாக வருகை தருபவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி தவறாமல் நடைபெறும். நமது ஊழியர்கள், தலைவர்கள் கேள்விகளுக்கு மகிழ்ச்சியாக பதில் கொடுத்து உங்களுக்கு தேவையான ஜெப உதவிகளை அளிப்பர்.