முதியோர் ஊழியங்கள்

70 வயதிற்கு மேற்பட்ட பெரியோர்கள்; கிறிஸ்துவுக்குள் கனிகொடுக்கும்படி ஊழியம் செய்யப்படுகிறது.

ஏனைய விசுவாசிகளுடன் அர்த்தமுள்ள உறவை ஏற்படுத்த நாங்கள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறோம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை சந்தித்து ஒருவருக்கொருவர் பணி செய்து ஒன்றாக திருச்சபையின் நோக்கத்திற்காக உழைப்போம். எமது பெரியோர் கூட்டமானது ஒவ்வொரு சனி காலை 10:30 முதல் 12 வரை மல்டிபர்பஸ் ஹாலில் நடைபெறுகிறது. அங்கே ஒன்றாக வழிபட நேரம், அந்த வாரத்திற்கான பேச்சாளர், சிறு தேவ செய்தியையும் தொடர்ந்து மதிய உணவும் அளிக்கப்படுகிறது.


துணை வாழ்வாதார உதவி

சபை கூட்ட முடிவில் முதியோர்களுக்கு ஒரு சிறிய அளவு மளிகைப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது. அது மாதம் முழுவதற்கும் போதுமானதாக இருக்கும். சில பொருட்கள் - சோப்பு, எண்ணெய் கைச் செலவிற்கு பணம், பஸ் டிக்கட் செலவு ஆகியவை ஆகும்.

“தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" .(சங்கீதம் 71:17-18)