மாணவர் ஊழியங்கள்


கிறிஸ்துவின் மேல் உள்ள வேட்கையை விழித்தெழச்செய்து அவரைத் தேடும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களுடன் இணையுங்கள். நம்மைப்படைத்து விசேஷித்த விதமாய் தனித்துவமாய் நம்மை அன்பு செய்யும் கர்த்தரால் நாம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம். அவரோடு உறவில் ஒன்றிணைந்து வளரவும், உண்மையாகவே நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் வண்ணம் நம்பிக்கை வாழ்வு வாழ்வதே எமது விருப்பம். நமது ஜெபக் குழுவில், தேவ வார்த்தையிலும், ஆழமான உறவுகளாலும் அருமையான நேரம் கிடைக்கும்.

பரிசுத்த ஆவியானவர் உண்டாக்குகிற பிரமிக்கத்தக்க தேவசெயல்களோடு கூடிய , தமிழ் மாணவர் ஆராதனையானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9:30 மணியளவில் ஷாலோம் ஹாலில் நடைபெறுகிறது. வந்து கலந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவனுடன் நடக்கத் தொடங்குங்கள் !

தவறவிடாதீர்கள்

ஒவ்வொரு மாதமும் நடக்கும் எங்கள் மாணவர் கூடுகையானது வாழ்க்கையை மாற்றும் உறவுகளை உருவாக்குகிறது. இங்கு விளையாட்டுகள், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள், தேவ வார்த்தையுடன் அற்புதமான நேரம் மற்றும் இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வண்ணம் நடைமுறை போதனைகள் உண்டு. வந்து கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதம் பெறுங்கள்

RED-தமிழ் மாணவர் ஐக்கியம் : ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை | எல்-ஷடாய் ஹால் | காலை 11:00 மணி யளவில் நடைபெறுகிறது

RED-ஆங்கில மாணவர் ஐக்கியம் : ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை | எல்-ஷடாய் ஹால் | மதியம் 12:15 மணி யளவில் நடைபெறுகிறது மறந்து விடாதீர்கள் , கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் தனியாக இருக்கக்கூடாது.

வாரம்தோறும் நடக்கும் ஜீவ குழுவில் கலந்து கொள்ள info@bethelcitycathedral.com மூலம் எங்களை தொடர்புகொள்ளுங்கள் . அல்லது ஆராதனைக்குப் பிறகு எங்கள் உதவியாளர் குழு உறுப்பினரைச் சந்திக்கவும்.
உங்களை குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.


கல்லூரி ஜெபக்குழுவில் இணைய விருப்பமா?

எங்களை தொடர்புகொள்ள : +91(422) 252 2885 அல்லது info@bethelcitycathedral.com