River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.
Rev. டேவிட் மற்றும் பாஸ்டர் கெத்சியா பிரகாசம் அவர்கள் பெத்தேல் சிட்டி கத்தீட்ரல் திருச்சபையின் தலைமை போதகர்களாக இருந்து வருகிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சபையை நடந்தி வருகிறவர்கள் பலரை ஆயத்தப்படுத்தி இந்திய தேசத்திலும் வெளி நாடுகளிலும் இந்தியன் பெந்தெகொஸ்தே அசம்பிலீஸ் சார்பாக ஊழியங்களை ஸ்தாபிக்கும் ஆட்களை அனுப்பிட ஒரு பாத்திரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் அவர் சிறியதாக துவங்கின கூட்டமானது இப்போது கோயம்புத்தூர் பட்டணத்தில் வளர்ந்து வரும் சபையாக இருந்து வருகிறது. இத்திருச்சபையின் மூலம் பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு உதவுவது மட்டுமல்லாமல் கோயம்புத்தூரிலும் மற்றும் இந்திய தேசத்தின் பல பகுதிகளிலும் பலவிதமான சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அவருடைய இளைய குமாரன் பாஸ்டர் டெரி பிரகாசம் அவர்கள் இத்திருச்சபையின் நிர்வாக போதகராக இருந்து சபையின் அன்றாட செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு சபையில் பிரசங்கம் மற்றும் போதித்தல் ஊழியங்களையும் செய்து வருகிறார்.