River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.
1976 – ம் ஆண்டு 50 பேர் அடங்கிய ஒரு சிறு கூட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் பட்டணத்தில் ஒன்று கூடியது. அவர்களுடைய நோக்கம் தைரியமாக தேவனுடைய வார்த்தையைப் பிரகடனம் செய்வது, ஆராதனை மூலம் இயேசுவின் நாமத்தை உயர்த்துவது, ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து ஜெபிப்பது, இயேசுவின் சுவிசேஷத்தை தைரியமாக பிரசங்கம் செய்வது போன்றவை ஆகும். இவ்வாறு அந்த நாளில் திருமறைப் பெரியார் யோபு ஞானப்பிரகாசம் அவர்களது தலைமையில் இந்திய பெந்தகொஸ்தெே சபை பிறந்தது.
பாஸ்டர். யோபு ஐயா அவர்களின் புதல்வர், பாஸ்டர். டேவிட் பிரகாசம், அவர்கள் விசுவாசத்தினால் உந்தப்பட்டு தனது நீண்டநாள் குறிக்கோளான பெத்தேல் தீப்பொறி வேதாகமக் கல்லூரியை துவக்கினார். உள்ளுர் சபைத் தலைவர்களை பயிற்றுவித்து, அவர்களை நற்செய்தி அறிவிக்கப்படாத பிற இடங்களில் திருச்சபைகளை தோற்றுவிக்க அனுப்புவதே அவர் விருப்பமாக இருந்தது. இது சிறிய அளவில் ஒருவரையொருவர் தயார் படுத்துவதில் ஆரம்பிக்கப்பட்டு, விரைவில் இது வேதாகமக் கல்லூரியாக தேவ அழைப்பை உணர்ந்து ஊழியம்புரிய விரும்புகிறவர்களை தயார் செய்கிறது. இன்று இந்த கல்லூரி வருடம் 70 நபரை பயிற்றுவிக்கின்றதோடு அல்லாமல் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
விசுவாசத்தினால் உந்தப்பட்டு சபையானது புதிய மற்றும் விரிவான வசதிகளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தது. அவர்கள் ஒரு இடத்தை வாங்கி முதன் முறையாக 1200 இருக்கை வசதி கொண்ட அரங்கு மற்றும் பலஅரங்குகள் கொண்ட கீழ்தளம் குழந்தைகள் பள்ளியாகவும் மற்றும் இளைஞர்கள் தொழிற்கல்வி கூடமும் அடங்கிய அரங்கத்தையும் கட்டினர். இது தான் முதன்முறையாக பல வசதிகளுடன் கட்டப்பட்ட மிகப் பெரிய சபையாகும்.
மேலும்
அநேகர் இது சபையின் எண்ணிக்கையை விட மிகவும் பெரியது என்று எண்ணினர், ஆனால் பாஸ்டர். டேவிட் பிரகாசம் ஐயா அவர்கள், “நாம் இதை கட்டுவோம், கடவுள் இதை நிரப்புவார்” என்று சொன்னார். அதையே தேவன் செய்தார்.
350 பேர் கொண்ட சபையானது 2000 பேருக்கும் மேலாக விரைவில் வளர 1200 இருக்கைகள் கொண்ட சபை அரங்கம் மீண்டும் போத வில்லை. விசுவாசத்தினால் உந்தப்பட்டு புதிய வசதிக்கான விரிவாக்கப்பணி துவங்கப்பட்டது.
ஆலயக் கட்டிட விரிவாக்கப் பணி என்பது ஒரு சரீரப்பிரகாரமான பிரயாசமாக அல்லாமல் ஒரு ஆவிக்குரிய யுத்தமாக மாறினது. சபைக்கு விரோதமாக போடப்பட்ட உயர்நீதிமன்ற வழக்கு கட்டிட வேலையை 2 வருடங்களுக்கு நிறுத்தி வைத்தது. கடைசியாக தேவன் சபைக்கு வெற்றியைக் கொடுக்கவே, கட்டிட வேலை மீண்டும் தொடங்கப்பட்டு 4 வருடங்களில் நிறைவு பெற்றது.
சபையானது நடந்து முடிந்த விரிவாக்கப் பணியினை தொடர்ந்து வாசல்கள் மீண்டும் திறந்து தேவனின் நம்பகத் தன்மையை கொண்டாடுகிறது. கர்த்தரின் தயவை, நவீன, முழுவதும் குளிரூட்டப்பட்ட 3000 இருக்கை கொண்ட சபை அரங்கு நினைவூட்டுகிறது. பெத்தேல் மாநகரப் பேராலயம் என்று மறு பெயரிட்டு, பாரத தேசத்தின் ஒளியாக, அவர்கள் பிரமாண்டமான திறப்பு விழாவை கொண்டாடினர்.