கடவுளை அறிந்துகொள்ளுதல்

படி 1

தேவனுடைய நோக்கம்: சமாதான ஜீவியம்

தேவன், உங்களை நேசிப்பதால் உங்களுக்கு நிறைவான, நித்தியமான சமாதான வாழ்வைக் கொடுக்க விரும்புகிறார்.

வேதம் சொல்லுகிறது.

ஏன் அநேகர் தேவன் தரும் இந்த சமாதானமான வாழ்வைப் பெற்றுக்கொள்வதில்லை ?



படி 2

பிரச்சனை: நம்முடைய பிரிவினை

நிறைவான வாழ்வைப் பெறும்படி தேவன் நம்மைத் தமது சாயலில் உருவாக்கினார். ஒரு எந்திர மனிதனைப் போல் நம்மை உருவாக்காமல், தன்னிச்சையாக சிந்திக்கும் திறனையும் நமக்குக் கொடுத்தார். நாமோ நமது சொந்த இஷ்டம்போல் நடந்து அவருக்குக் கீழ்ப்படியாமல் போகிறோம். இது தேவனிடமிருந்து நம்மைப் பிரித்துவிடுகிறது..

வேதம் சொல்லுகிறது…...

தேவனிடத்தில் சேர நம்முடைய முயற்சி

மனிதன், தனக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள பிளவை நிரப்பப் பல வழிகளைக் கையாளுகிறான்.

வேதம் சொல்லுகிறது..


படி 3

தேவனுடைய இணைப்பு: சிலுவை

இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தார்;. நமது பாவத்திற்கான விலையை அவர் செலுத்தி, தேவனுக்கும் நமக்கும் இடையிலிருந்த பிளவை நிரப்பப் பாலமானார்.

வேதம் சொல்லுகிறது....


தேவன் ஒரே வழியை உருவாக்கியுள்ளார். நாம்தான் தெரிந்தெடுக்க வேண்டும்.

நமது கடமை இயேசுவை ஏற்றுக்கொள்வது.

நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, விசுவாசத்தினால் இயேசுவை தமது சொந்த ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேதம் சொல்லுகிறது

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3 : 20)


அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1 : 12)


கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். (ரோமர் 10 : 9)

நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் இயேசுகிறிஸ்துவை இப்பொழுதே ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?

நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஜெபம் செய்வது எப்படி?

"அன்புள்ள பரலோக தகப்பனே, நான் ஒரு பாவி என்பதையும், எனக்கு உமது மன்னிப்பு தேவை என்பதையும் நான் அறிவேன். இயேசு என் பாவங்களுக்காக மரித்தார் என்று நான் நம்புகிறேன். நான் என் பாவங்களைவிட்டு மனந்திரும்ப விரும்புகிறேன். நான் இப்பொழுது விசுவாசத்தோடு நீரே என் ஆண்டவர், இரட்சகர் என்று அறிக்கைபண்ணுகிறேன். இயேசுவின்நாமத்தில்,ஆமென்."

தேவனுடைய வார்த்தையே நமக்கு ஆதாரமாயிருக்கிறது
நீங்கள் இந்த ஜெபத்தை ஜெபித்தால்,வேதம் சொல்கிறது…

நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்பொழுது, விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் வசிக்கும் பரிசுத்தஆவியின் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களின்மூலம் நீங்கள் தேவனின் குடும்பத்தில் பிறக்கிறீர்கள். இது மறுபிறப்பு அல்லது புதியபிறப்பு என்று அழைக்கப்படுகிறது.
இது கிறிஸ்துவுக்குள் உள்ள அற்புதமான புதிய வாழ்க்கையின் ஒரு ஆரம்பமேயாகும். இந்த உறவில்வளர, நீங்கள்செய்யவேண்டியது:

நீங்கள் இயேசுகிறிஸ்துவுடன் நடக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மேலும் ”புதியஆரம்பம்” என்ற புத்தகத்தை நீங்கள் பெறவிரும்பினால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
+91 9677933033