பெத்தேல் மாநகரப் பேராலயத்திற்கு நீங்கள் புதியவரா?

வரவேற்கிறோம், நீங்கள் வந்தது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி..!.

உங்கள் உலக மற்றும் கலாச்சார நம்பிக்கைளை விட்டு சத்தியத்தின் மூலம் உண்மை தெய்வத்தோடு தொடர்பு கொண்டு, தேவனுடைய மகிமையையும், கிருபையையும் முழுவதுமாக உணர்ந்து அனுபவிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்த ஆவிக்குரிய உணர்வை உங்களுக்குக் கொடுப்பது ‘பெத்தேல் சபை’.

இந்த சபையாகிய குடும்பத்திற்கு நீங்கள் வந்திருப்பதால், எங்களது அன்பு, ஒற்றுமை, பெலன் போன்ற தன்மைகளை நீங்களும் பெற்று உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்துகொள்வீர்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகள் மற்றும் திறமைகளை உபயோகப்படுத்தும் ஒரு இடமாகவும் இந்த சபை விளங்கும்.

“சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக.”( எபே. 3 : 21 )

எங்கள் சபை

எங்கள் சபையின் நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவதுதான். தேவனுடைய ஊழியர்களைக் கொண்டு தேவன் அநேகருடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதால், இந்த ஊழியம் ஒரு தொடர் ஓட்டம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது.



எங்கள் கடந்த காலம்: தேவனின் தொடர்ந்துள்ள செயற்பாடுகள்

எங்கள் ஆராதனைக்கு நீங்கள் வரும்போது அநேக இன்முகங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். உதவியாளர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்த உதவி செய்வார்கள். வரவேற்பாளர்கள் உங்களை வரவேற்று உங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்து,சரியான இருக்கைகளுக்கு உங்களை அழைத்துச் செல்வார்கள்.

என்ன உடுத்துவது? ஆடை, அணிகலன்களைப் பற்றி ஆண்டவர் கவலைப்படுவதில்லை. இருதய சுத்தம்தான் அவருக்கு முக்கியம். உள்நாட்டு, மேலைநாட்டு ஆடைகளை அணிந்த அநேகரைப் பார்ப்பீர்கள். கவர்ச்சிகரமான, தகுதியற்ற ஆடைகளை அணிவதும் தவிர்க்கப்படுவது நலம்.


எங்கள் ஆராதனைகள்

எங்கள் ஆராதனைகள் மூலம் ஜனங்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றி தேவனோடு மாறாத உறவு கொள்ளச்செய்கிறோம். வேத வசனங்களை உள்ளது உள்ளபடிப் பேசுகிறோம். தேவ குமாரனாகிய இயேசுவுக்கு நன்றியறிதல் உள்ளவர்களாக இருப்பதே எங்கள் நோக்கம்.

ஏறக்குறைய 2 மணி நேரம் நடக்கும் எங்கள் ஆராதனைக்கு நேரத்தோடு வருவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பழைய,புதிய பாடல்களை நல்ல இசையோடேகூடப் பாடிக் கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம். பின்பதாக வேத புத்தகத்தைத் திறந்து அந்த நாளில் தேவன் நம்மிடத்தில் பேச விரும்புகிற வார்த்தையை ஆவலுடன் தேவ ஊழியர் பேசக் கேட்கிறோம்.

மேலும் வார நாட்களில் நடக்கும் ஆராதனைகள் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

எங்கள் ஆராதனை நேரங்களையும் இடங்களையும் அறிந்துகொள்வதற்கு இங்கே கொடுக்கவும்.

சமீப கால செய்திகளைக் கேட்கவும் பார்க்கவும் இங்கே கொடுக்கவும்.

எல்லாப் பிரசங்கங்களும் பதிவு செய்யப்பட்டு புத்தக நிலையத்தில் கிடைக்கும்.

ஆராதனைகளின் முடிவில் புதிதாய் வருகிறவர்களுக்காக நடத்தப்படும் வகுப்பில் எங்கள் ஊழியர்களை சந்திப்பீர்கள் நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் மன மகிழ்ச்சியோடு பதிலளித்து, நல்ல புத்தகங்களையும் பரிசாக உங்களுக்கு வழங்குவார்கள்.


எங்கள் குடும்பங்கள்


வாரந்தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் மாணவர்களை ஒட்டு மொத்தமாகவும், வயது மற்றும் ஆண் & பெண் வாரியாகவும் வைத்து நடத்தப்படும். மற்றும், கோடை கால வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவும், அன்புடன் பழகவும் கற்றுக்கொடுப்போம்.

பெரியவர்களுக்கான ஊழியங்கள், 20 வயதுமுதல் முதியவர்கள் வரையிலுள்ள எல்லா வயதினருக்கும், இரு பாலாருக்கும் ஏற்ற விதங்களில் நடத்தப்படுகின்றன. கருத்தரங்குகள், குறுகியகாலப் பயிற்சிகள் மூலம், ஆராதனை, பாடல்கள், சுவிசேஷ ஊழியங்களுக்காக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


கேள்விகளுக்கு?

அணுகவும். +91(422) 252 2885 அல்லது info@bethelcitycathedral.com